பரிந்துரை வழிமுறைகள்

பரிந்துரை வழிமுறைகள்


Buy Above 2700 என்றால் என்ன?

Buy Above என்பது கொடுக்கப்பட்ட விலை மட்டத்திலிருந்து பொருட்களின் விலை மேலே வரும் போது மட்டுமே வாங்க வேண்டும். உதாரணமாக Buy above crude oil @ 2700, என்ற குறும் செய்தி உங்கள் கைபேசிக்கு வரும் பொழுது நீங்கள் கவனமாக 2700க்கு மேல் அதாவது 2701 வந்தால் மட்டுமே வாங்குவது உகர்ந்த்தாக இருக்கும் . இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் எங்களால் கொடுக்கப்பட்டுள்ள மேல் விலையிக்கு மேலே ( Buy Above Level )வாங்க முடியவில்லை என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கிறது. இதற்கும் stop loss buy order என்ற வழிமுறையை பின்பற்றலாம் .பின்வரும் கேள்வி மற்றும் பதிலை தெரிந்துகொள்ளவும்

Enrich Broking: Commodity Trading In Tamil

Stop Loss Buy Order என்றால் என்ன?

Stop Loss Buy Order என்பது கொடுக்கப்பட்ட விலை மட்டத்திற்க்கு மேலே முன்கூட்டியே Stop Loss Buy Order- மற்றும் இலக்கை Target பதிவு செய்துவிடவும். நிர்ணையக்க பட்ட விலையை வாங்கம் பட்சத்தில் உடனடியாக இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது .

(உதாரணமாக Buy above crude oil @ 2700 target 2720 என்ற விலையை பரிந்துரையாக கொடுக்க பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம். ஆனால் தற்போது வர்த்தகமாகும் விலை 2690 , நாம் முன்கூட்டியே 2701 ல் stop loss Buy order மற்றும் இலக்கை Target 2720 பதிவு செய்து விட வேண்டும்) .

Sell Below 2700 என்றால் என்ன?

Sell Below என்பது கொடுக்கப்பட்ட விலை மட்டத்திலிருந்து பொருட்களின் விலை கீழே வரும் போது மட்டுமே விற்க வேண்டும். உதாரணமாக Sell Below crude oil @ 2700 target 2680 என்ற குறும் செய்தி உங்கள் கைபேசிக்கு வரும் பொழுது நீங்கள் கவனமாக 2700க்கு கீழ் அதாவது 2699 என்ற விலையில் விற்பது உகர்ந்த்தாக இருக்கும்

Stop Loss Sell Order என்றால் என்ன?

Stop Loss Sell Order என்பது கொடுக்கப்பட்ட விலை மட்டத்திற்க்கு கீழே முன்கூட்டியே Stop Loss Sell Order- மற்றும் இலக்கை Target பதிவு செய்துவிடவும். அந்த விலையை விற்கும் பட்சத்தில் உடனடியாக இலக்கை எட்ட வாய்ப்பு உள்ளது ..

உதாரணமாக Sell Below crude oil @ 2700 target 2680 என்ற விலையை பரிந்துரையாக கொடுக்க பட்டுள்ளதாக வைத்துக்கொள்வோம் . ஆனால் தற்போது வர்த்தகமாகும் விலை 2710 , நாம் முன்கூட்டியே 2699 ல் stop loss Sell order மற்றும் இலக்கை Target 2680 பதிவு செய்து விட வேண்டும்

Between Buy 2700-2690 என்றால் என்ன?

Between Buy என்பது இரண்டுக்கும் இடைமட்டத்தில் ஏதேனும் ஒரு விலையில் வாங்கிக்கொள்ளலாம். தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு லாட் 2700- ரிலும், மறுபடியும் கீழே வரும்போது மற்றொரு லாட் அதாவது 2690-ல் என்ற விலையில் வாங்குவது நல்லது .மற்றும் இவ்இரண்டிற்கும் ஒரே ஸ்டாப் லாஸ் (STOP LOSS ) யை பயன்படுத்திக்கலாம்

Between sell 2700-2690 என்றால் என்ன?

Between Sell என்பது இரண்டுக்கும் இடைமட்டத்தில் ஏதேனும் ஒரு விலையில் விற்கலாம். தங்களின் வசதிக்கு ஏற்ப ஒரு லாட் 2690- லும் மறுபடியும் மேலே உயரும்போது மற்றொரு லாட் 2700 -ல் என்ற விலையில் விற்பது நல்லது .மற்றும் இவ்இரண்டிற்கும் ஒரே ஸ்டாப் லாஸ்யை (STOP LOSS ) பயன்படுத்திக்கலாம் .

இலாப புக்கிங் (Profit Booking):

1) முதல் இலக்கை அடையும் பொது முதல் லாட்டை வெளியேறவும் மற்றொரு லாட்டை விற்ற விலையிலேயே நட்ட oதடுப்பு பதிவுசெய்யவும். (trailing Stop Loss)

2) இரண்டாவது இலக்கை அடையும் பொது மற்றொரு லாட்டை வெளியேறவும்

Dips on buy Gold 31000 என்றால் என்ன?

Dips on buy என்பது கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிக்கு அருகாமையில் வரும்பட்சத்தில் வாங்கிக்கொள்வது அவர்வர் திறமையாகும். உதாரணமாக தற்போது தங்கம் வர்த்தகம் நடைபெறும் விலை 31200 ஆனால் பரிந்துரையாக கொடுக்கப்பட்டுள்ள வாங்கும் விலை dips on Buy at 31000 சந்தையில் வர்த்தக இடையே 31030 அல்லது 31020 என்ற விலை வரும் பொது வாங்கிவிடலாம். இதில் என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் எந்த அளவிற்கு உள்களால் மலிவு விலையில் வாங்க முடியுமோ அதுவே உங்களுக்கு நல்லதோர் பரிசாக இருக்கும் .

Dips on Sell Gold 31200 என்றால் என்ன?

Rise on Sell என்பது கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிக்கு அருகாமையில் வரும்பட்சத்தில் விற்று விடுவது அவர்வர் திறமையாகும். உதாரணமாக தற்போது தங்கம் வர்த்தகம் நடைபெறும் விலை 31000 ஆனால் பரிந்துரையாக கொடுக்கப்பட்டுள்ள விற்கும் விலை dips on Sell at 31200 சந்தையில் வர்த்தக இடையே 31170 அல்லது 31185 என்ற விலை வரும் பொது விற்றுவிடலாம். இதில் என்ன ஒரு ஆச்சிரியம் என்றால் எந்த அளவிற்கு உள்களால் அதிகபட்ச விலையில் விலையில் விற்க முடியுமோ அதுவே உங்களுக்கு நல்லதோர் பரிசாக இருக்கும்.

எப்படி stop Loss-யை பயன்படுத்துவது?

எப்பொழுதும் முழு விலையாக (Round figure) போடுவது தவிர்க்கவும், உதாரணமாக Buy crude oil @ 2715 target 2750 stop Loss @ 2700 என்றால் நீங்கள் வாங்கி இருந்தால் நட்ட தடுப்பு விலையிக்கு( stop loss rate) கீழ் மட்டத்தில் 2699 அல்லது 2698 ல் பதிவு செய்வது பாதுகாப்பாக இருக்கும்.

அல்லது Sell crude oil @ 2675 target 2650 stop Loss @ 2700 நீங்கள் விற்று இருந்தால் நட்ட தடுப்பு விலையிக்கு( stop loss rate) மேல் அதாவது 2701 அல்லது 2702 என்ற விலையில் பதிவு செய்வது நல்லது.

Positional call என்றால் என்ன?

Positional call என்பது தினசரி வர்த்தகம் பயன்படுத்துவது முறை இல்லை . இவை இலக்கை அடையவும் வரை அல்லது ஸ்டாப் அடையும் வரை காத்திருக்கும் முறையே positional call ஆகும் .இந்த விஷயத்தில் நீங்கள் Exchange நிர்ணயிக்கப்பட்ட பணத்தை கண்ணகில் வைத்திருக்க வேண்டும்.

முக்கிய குறிப்புகள்:

1) ஆய்வறிக்கை பரிந்துரைகளில் கொடுக்கப்படுள்ள வாங்க மற்றும் விற்க (Buy& Sell) பரிந்துரைகளிள் சந்தையின் திசை ஏதேனும் ஒரு திசைக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் அத்தேதிசையை மட்டும் பின்பற்றவும்.

2) ஒரு சில பொருள்களுக்கு ஒரு திசை மட்டும் பரிந்துரையாக கணிக்கப்படுருக்கும் அதை மட்டும் பின்பற்றவும்.

3) இழப்பை தவிர்க்க கொடுக்கப்படுள்ள நட்ட தடுப்பு முறையை (STOP LOSS) பயன்படுதிக்கொள்ளவும்.

4) சந்தையில் தொடக்கத்திளேயே இடைவெளி ஏற்றமோ! அல்லது இடைவெளி ஏற்றக்கத்திளோ!

(Gap up or Gap down) இலக்கை அடையும் பட்சத்தில் அதை கைவிடவும்.

முடிவுரை:

அனைவரும் நட்ட தடுப்பு முறை பயன்படுத்துவதால் அளவிற்கு அதிகமான இழப்புக்களை தடுக்க முடியும் அல்லது இலாபத்தை எடுத்துக்கொள்ள முடியும் .மற்றும் வர்த்தக இழப்பில் இருந்து உங்கள் முதலீடுகளை காப்பாற்ற படுவதுமட்டும் அல்லாமல் சந்தையில் முதலீடு செய்ய இன்னோருமுறை வாய்ப்பளிக்கிறது. உலகம் இயங்கும் வரை சந்தை இருக்கும் ஆனால் நாம் சந்தையில் இருக்க வேண்டும்மென்றால் ஒழுக்கமான வர்த்தக வியூகங்களை கையாள வேண்டும் .நீங்கள் நட்டம் அடைந்தால் மனதளவில் குழப்பம் மற்றும் தவரான முடிவுகளை அடிக்கடி எடுக்க நேரிடும் இதனால் மேலும் மேலும் இழந்துகொண்டாயேதான் இருப்பிர்கள்.

இதனால் நீங்கள் சந்தையில் இழந்த பணத்தை பிடிப்பதற்கே போராட தோன்றுமே தவிர ஒரு ஏதார்த்தமான மனநிலையில் வர்த்தகம் செய்ய முடியாது . இதனால் ஒவ்வொரு முறையும் அதிக முறை வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டே (over trade ) இருக்க வேண்டியதிருக்கும் அதில் அதிகப்படியான தவறான முடிவையே எடுப்பீர்கள் .

மொத்தத்தில் எங்கோளுடைய மிக முக்கியத்துவம் வாய்ந்தது கருத்து என்னவென்றால் நட்ட தடுப்பு முறையை (stop Loss) பயன்படுத்துவதன் மூலம் தங்களின் முதலீடுகளின் காப்பீட்டு பாலிசியாக வைத்துக்கொள்ளலாம்.

   
 
Loading...